வெள்ளி, 8 ஜூலை, 2016

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அகத்தீஸ்வரர்

அம்மனின் பெயர் : மங்கை நாயகி, பாகம்பிரியாள்

தல விருட்சம்     : வன்னி, அகத்தி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  4 மணி முதல் இரவு 8.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,  சேது ரஸ்தாசாலை, அகஸ்தியம்பள்ளி அஞ்சல் - 614 810 (வழி) வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.Ph:04369 - 250 012


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 190 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

* ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது.

* இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். 

* திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: