திங்கள், 24 அக்டோபர், 2016

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்,திருச்செந்தூர்


கோவில் பெயர்   : அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி   திருக்கோவில்

முருகன் பெயர்   : சுப்பிரமணியசுவாமி

கோவில் திறக்கும் : காலை 5 மணி முதல் இரவு 9 மணி 
                                               வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் 
திருச்செந்தூர் - 628 205 தூத்துக்குடி மாவட்டம்.Ph: 04639 242 221



கோவில் சிறப்பு :

* முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.

* முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


* ஆதிசங்கராச்சாரியரின் நோய் தீர்த்த செந்தூரான்
கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அவர் தன்னுடைய தாயார் தண்ணீரெடுக்கச் செல்லும் ஆறு வெகு தூரத்தில் உள்ளது என்பதற்காக அவ்ஆற்றையே தன்னுடைய வீட்டிற்கு அருகில் திரும்பி ஓடச்செய்த ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய சித்தரான அவரை காச நோய் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீள் முடியாமல் துன்பமடைந்தார்.சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அப்போது தோன்றிய சிவன்,அசுரனை சம்காரம் செய்த அற்புதத் தலமான திருச்செந்தூர் செல்வாய் அங்கு எம்முடைய அம்சமாக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானைப் பணி ; உன்னுடையநோயைக் குணமாக்கும் ஆற்றல் கலியுகக் கந்தனிடமே உள்ளது என்றார்.ஆகாய வழியாக செந்தூர் வந்த சங்கரர், முருகப்பெருமானை குகைக் குடைவறையில் ஆதிசேஷன்[பாம்பு] முருகனின் பாதங்களைப் பூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டார்.தீராத தன்னுடைய வயிற்றுவலியைத் தீர்த்து வைத்திட முருகனிடம் வேண்டி கோயிலில் வழங்கிய விபூதியையும்,பன்னீர் இலையையும் உண்டார்.என்னே அற்புதம் அடுத்த நொடியில் அவரது நோய் அகன்றது.உடனே முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம்[புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம்] என்ற நூலைப் பாடினார்.’’கண்டால் நின் இலை நீறு கைகால்வலிப்புக்-காசம் கயம்குட்ட முதலாய நோயும்-விண்டோடு மேபூத பைசாசம் யாவும்-வினையாவுமே செந்தி அமர்தேவ தேவே’’என்ற பாடலுடன் சிறப்பு வாய்ந்தது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: