புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் (பழநி)

கோவில் பெயர் : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

முருகன் பெயர்  :                    திருஆவினன்குடி மூலவர்
மலைக்கோவில் மூலவர் : தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்.
Ph:04545 - 242 293, 242 236, 242 493.
http://www.palanimurugantemple.tnhrce.in/

கோவில் சிறப்பு :

* இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். 
இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

* திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும்
இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம்
செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450
மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல
வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும்
உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு
ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. பழநி
மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில்
பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில்
ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள்.
இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: