வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  அகஸ்தீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)

அம்மனின் பெயர் :  அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம்     : வன்னி மரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம். Ph:94427 86709

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 272 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  புண்ணியகோடியப்பர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : புண்ணியகோடியப்பர்

அம்மனின் பெயர் :  அபிராமி

தல விருட்சம்     : கஸ்தூரி அரளி

கோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், 
திருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,
குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம் 
Ph:  04366-232 853,94433 32853, 99431 52999

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.

* தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.

அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  திருக்கேதீச்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : மகாபலேஸ்வரர், 
பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்

அம்மனின் பெயர் :  கவுரி

தல விருட்சம்     : வன்னி மரம்

கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு திருக்கேதீச்வரர்  திருக்கோவில் மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம். இலங்கை.
போன்:0232233003, 0112360316, 0112582890, 0112586042

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 276 வது தேவாரத்தலம் ஆகும்.

கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது தோஷம் இருப்பின், பாலாவியில் நீராடி, கேதீச்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று ஐதீகம். பாலாவி தீர்த்தம், பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கும் மகா சக்தி படைத்தது. இங்கு நீராடி பித்ருபூஜை செய்தால், கயையில் பித்ரு பூஜை செய்த புண்ணியம் கிட்டும். சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன், இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால், மாதுவட்டா என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது, தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி, அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால், நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.

* ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு   மகாபலேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்: மகாபலேஸ்வரர், 
பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்

அம்மனின் பெயர் :  கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில், 
திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம்,
 கர்நாடகா மாநிலம். Ph:08386 - 256 167, 257 167

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.

*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். 

* கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் "துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.

* சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  மகாதேவர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்

அம்மனின் பெயர் :  உமையம்மை 

தல விருட்சம்     : சரக்கொன்றை

கோவில் திறக்கும் : காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்,
திருஅஞ்சைக்களம்,கொடுங்கலூர்,
திருச்சூர் மாவட்டம் -680 664. .Ph:0480-281 2061

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 266 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்

* இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு மகாகாளேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : மகாகாளேஸ்வரர்

அம்மனின் பெயர் :  குயில்மொழி நாயகி

தல விருட்சம்     : புன்னை

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில், இரும்பை-605 010, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.0413 - 268 8943, 98435 26601.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 265 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

* ஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.