திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ஆபத்சகாயர்

அம்மனின் பெயர் : பெரிய நாயகி

தல விருட்சம் : கதலி (வாழை), வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 11 மணி வரை, 
                               மாலை  4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் , திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம் .Ph: 04362 326 668

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 50 வது தேவாரத்தலம் ஆகும்.

* பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.

* பழமையான ராஜகோபுரம் - மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

* திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: