வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்கோவில் பெயர் :  அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   கடைமுடிநாதர்

அம்மனின் பெயர் : அபிராமி

தல விருட்சம் :   கிளுவை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி :  அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோவில் சிவன் கோயில் வீதி, கீழையூர் - 609 304. நாகப்பட்டினம் மாவட்டம். 
Ph: 04364 283 261, 283 360, 94427 79580.


கோவில் சிறப்பு :


* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 18 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: