கோவில் பெயர் : அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மகாலட்சுமிபுரீஸ்வரர்
அம்மனின் பெயர் : உலகநாயகி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்,
திருநின்றியூர் - 609 118. நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph: 04364 283 261, 283 360, 94427 79580.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 19 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. தலவிநாயகர்: செல்வகணபதி. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான்.
* சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.
* கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.
* தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
0 Comments: