சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்
கோவில் பெயர் :  அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் : பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி

தல விருட்சம் :  வாகை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                             மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில், 
திருவாளப்புத்தூர் - 609 205.
 நாகப்பட்டினம் மாவட்டம்.Ph: 04364 - 254 879, 98425 38954.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 29 வது தேவாரத்தலம் ஆகும்.

* சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* .கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்

* சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம். இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம்.

* பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேஷ பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

* பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள். ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: