திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில் 

சிவனின் பெயர்  : மரகதாசலேஸ்வரர் 

(திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்)

அம்மனின் பெயர் : மரகதாம்பிகை, லலிதா

தல விருட்சம் : புளியமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி முதல்
                                மாலை 6.30 மணி திறந்திருக்கும். 
கோயிலுக்கு செல்பவர்கள் முன்னரே     
அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது



முகவரி : அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில் ,
 ஈங்கோய்மலை - 621 209. 
திருச்சி மாவட்டம். Ph:04326 - 2627 44, 94439 - 50031.


கோவில் சிறப்பு :


* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 63 வது தேவாரத்தலம் ஆகும்.


* அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும்.

* இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி
சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள்
விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம்.
சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை
மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க
இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: