திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர் )

அம்மனின் பெயர் : கரும்பார்குழலி

தல விருட்சம் : வேம்பு

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்



முகவரி : அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்திருக்கோவில், அய்யர் மலை - வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல்-639 120, வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம். Ph:04323-245 522
Email-eoayyarmalai@gmail.com

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 64 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம்.

* இங்கு இறைவனுக்கு கேந்திபூ சாத்துவதில்லை. மாணிக்கம் பதித்த விலை மதிப்பற்ற கிரீடம் சூட்டி கார்த்திகை 1ந் தேதி சுவாமி காட்சியளிப்பார்.

* தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். 

* இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன. இத்தலத்து ரத்தினகிரீஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள். தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன. இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா, ரத்த கொதிப்பு,நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி, இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறிவிட்டு வந்தாலே அதிசயமான மாற்றத்தை அடைவதை முழுமையாக உணர முடியும். இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டால் கூடிய விரைவில் குணமடைவது கண்கூடாக நடந்து வரும் அதிசயமான உண்மை.

* சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: