செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : கடம்பவனேஸ்வரர்

அம்மனின் பெயர் : முற்றிலா முலையம்மை

தல விருட்சம் : கடம்ப மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்



முகவரி : அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவில், 
குளித்தலை - 639 104. கரூர் மாவட்டம்.Ph:04323 - 225 228

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 65 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்குள்ள சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது சிறப்பாகும்

* கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருப்பது தனி சிறப்பு.

.இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. சிவன் வடக்கு நோக்கி இருப்பதால், கோஷ்டத்தின் பின்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருக்கிறார். வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனையும், நவக்கிரகத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர். அருகே சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது

* பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: