கோவில் பெயர் : அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
அம்மனின் பெயர் : பசும்பொன் மயிலாம்பிகை
தல விருட்சம் : பராய் மரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி : அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோவில், திருப்பராய்த்துறை, திருச்சி. 639 115. Ph 99408 43571
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 66 வது தேவாரத்தலம் ஆகும்.
* சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.
* கருவறைக்கு பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி தனி மண்டபம் போன்ற அமைப்பில் கோஷ்டத்தில் காட்சி தருகிறார். ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்றகோலத்தில் இருக்கிறார். இவரை "பரளி விநாயகர்' என்கின்றனர்.
* பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
0 Comments: