செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,

அம்மனின் பெயர் : காந்திமதியம்மை.

தல விருட்சம் : வில்வம்



முகவரி :


அருள்மிகு : அருள்மிகுபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்,
 உறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.
Ph : 0431-276 8546, 94439-19091, 97918 06457

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

* சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

* படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.


* தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

* கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: