செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு தாயுமானவர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில்

சிவனின் பெயர்  : தாயுமானவர்

அம்மனின் பெயர் : மட்டுவார்குழலி

தல விருட்சம் : வில்வம்

முகவரி : அருள்மிகு : அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி - 620 002. திருச்சி மாவட்டம்
Ph: 0431 - 270 4621, 271 0484, 270 0971.
நிர்வாக அதிகாரி:91718 - 78305
http://www.trichyrockfort.tnhrce.in/

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12. மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.

* சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

* பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

* இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

* மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, "மேல்வீதி' என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, "கீழ்வீதி' என்றும் சொல்கிறார்கள்.
விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார்.

* நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் "மாணிக்கவிநாயகர்' இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், "பாதாள அய்யனார்' இருக்கிறார்.

* திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: