செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்


சிவனின் பெயர்  : பசுபதீஸ்வரர், 
                                 (பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்)

அம்மனின் பெயர்: சவுந்திரநாயகி

தல விருட்சம்    :  ஆலமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, மாலை
 4 மணி முதல் இரவு 8.30  மணி வரை 

முகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில், 
பசுபதிகோயில் அஞ்சல் - 614 206. தஞ்சாவூர் மாவட்டம்.
 Ph:9791482102, 8056853485

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 79 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* கோஷ்ட மூர்த்தங்களாக ; விநாயகர், தெட்சிணாமூர்த்தி, நேர்பின் புறத்தில் திருமால் பிரமன் உருவங்களுடன் இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இவ்வூர்க்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலும், தாழமங்கையில் சந்திரமௌலீஸ்வரர் கோவிலும் உள்ளது.

* அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார். கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.

* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: