கோவில் பெயர் : அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வசிஷ்டேஸ்வரர்
அம்மனின் பெயர்: உலகநாயகியம்மை
தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி : அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்,
தென்குடித்திட்டை- 614 206.தஞ்சாவூர் மாவட்டம்
Ph: 04362 252 858, 94435 86453
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இது 78 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.
* மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். நவக்கிரகத்தில் உள்ள வியாழன் (குரு) தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.
* குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.
* இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
0 Comments: