வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  உத்திராபசுபதீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  கணபதீஸ்வரர்

அம்மனின் பெயர் :  வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்)

தல விருட்சம்     :   காட்டாத்தி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, 
                                   மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோவில், கணபதீச்சரம், 
திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் - 609 704. 
திருவாரூர் மாவட்டம். 
Ph: 04366 - 270 278, 292 300, +91-94431 13025.

கோவில் சிறப்பு

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.

*   சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனி சன்னதியில் அருள்பாலிக்கும் உத்திராபசுபதீஸ்வரர் தற்போதும் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.

* பிரகாரத்தில் புஜங்கலலிதமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிட்சாடனார், திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர் என வரிசையாக எட்டு சம்ஹாரமூர்த்திகள் காட்சி தருவது விசேஷம்.

*  இவ்வாறு அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். 

* தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர் அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். 

* சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. 

* சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது. பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.

* செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: