கோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : இரத்தினகிரீசுவரர் ,மாணிக்கவண்ணர்
அம்மனின் பெயர் : வண்டுவார்குழலி
தல விருட்சம் : வாழை(மருகல்)
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : முகவரி:அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோவில், திருமருகல்- 609 702, நாகப்பட்டினம் மாவட்டம்.Ph: 04366 270 823
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 143 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல விநாயகர் பிரதானவிநாயகர் எனப்படுகிறார்.
* இத்தலத்தில் வழிபடுவோரை பாம்பு தீண்டுவதில்லை என்பதால் பூச்சி, விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டோர் அல்லது பயம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பயம் விலகி நன்மை கிடைக்கப் பெறுகிறார்கள்.
* மேலும் இங்குள்ள ஜூரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு தீராத காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டு பிரச்சினைகள் நீங்கப்பெறுகிறார்கள்.
* லட்சுமி தீர்த்தத்தில் வரலட்சுமி நோன்பு நாளில் மூழ்கி நோன்பு இருந்து மறுநாளும் மூழ்கி மாணிக்கவண்ணரைத் தரிசித்துப் பாரனை செய்தால் கடன் தொல்லை நீங்கும். செல்வம் பெருகும் என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்கின்றனர்.
* இத்தலத்து மூலவர் மாணிக்கவண்ணரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
0 Comments: