வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வீரட்டானேஸ்வரர்

அம்மனின் பெயர் :  ஏலவார்குழலி, பரிமள நாயகி.

தல விருட்சம்     :   துளசி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                  மாலை  4.30 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், 
திருவிற்குடி - 609 405,திருவாரூர் மாவட்டம். Ph: 94439 21146

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 137 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது, எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம், தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில், பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம்மென்னும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன

* வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: