வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

அம்மனின் பெயர் :  சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

தல விருட்சம்     :    வீழிச்செடி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                             மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்
திருவீழிமிழலை - 609 505. திருவாரூர் மாவட்டம். 
Ph: 04366-273 050, 94439 24825

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 124 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது.

* கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது. நடராசர் சன்னதி சிறப்பானது.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: