வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சூஷ்மபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் :  மங்களநாயகி

தல விருட்சம்     :    வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
.                                                                மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோவில், (திருச்சிறுகுடி), செருகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் - 609 503 (வழி) பூந்தோட்டம், குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம்.Ph: 04366291646

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணலால் ஆன லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்தில் தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலி புகழ்ந்து கூறப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது. இத்தல மூலவருக்கு அபிஷேகம் இல்லை. சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

* சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: