சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)

அம்மனின் பெயர் : பூங்கொடிநாயகி

தல விருட்சம் :  இலந்தை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
 ஓமாம்புலியூர்- 608 306. 
கடலூர் மாவட்டம்.
Ph:04144-264 845

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 31 வது தேவாரத்தலம் ஆகும்.

*  சிவன் சுயம்சுயம்பு குருதலம்.

* வழிபட்டோர் : வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர்.

*  இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

.
* திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால்  இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்'  என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர். 
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: