கோவில் பெயர் : அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அபிராமேஸ்வரர்
அம்மனின் பெயர் : முத்தாம்பிகை
தல விருட்சம் : வன்னி, கொன்றை
கோவில் திறக்கும் : காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
முகவரி : அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில், திருவாமத்தூர்-605 402 விழுப்புரம் மாவட்டம்.Ph:04146-223 379, 98430 66252.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 232 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு மூலவர் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்.இங்குள்ள முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
* பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோயிலுக்குள் சிவனும் அம்மனும் அருள்பாலிப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனிக்கோயிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனிக்கோயிலில் மேற்கு பார்த்தும் அருள்புரிகின்றனர். அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது.
* சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்மனும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். திருவட்டப்பாறை என்ற சிவலிங்க மூர்த்தி இங்கு மிகவும் சிறப்பு பெற்றது. இதன் முன் அமர்ந்து ராமனும், சுக்ரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக வரலாறு.
* திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள முத்தாம்பிகையை பிரார்த்திக்கின்றனர்.
0 Comments: