வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  அகத்தீஸ்வரர்

அம்மனின் பெயர் :  லோபமுத்திரை

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
அம்பாசமுத்திரம் - 627 401. திருநெல்வேலி மாவட்டம். Ph:04634 - 250 882.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு.

* திருமணத்தடை நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க அகத்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: