கோவில் பெயர் : அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அரசலீஸ்வரர்
அம்மனின் பெயர் : பெரியநாயகி
தல விருட்சம் : அரசு
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோவில், ஒழிந்தியாம்பட்டு - 605 109. விழுப்புரம் மாவட்டம்.Ph:04147 - 235 472
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 264 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். திருஞானசம்பந்தர் இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு பதிகங்கள் பாடியிருக்கிறார். அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறாள்.
* அரசமர இலையால், சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், இழந்த பதவிகள் திரும்பக் கிடைக்கும், பதவி உயர்வு உண்டாகும் என்பது நம்பிக்கை.
0 Comments: