வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : சந்திரமவுலீஸ்வரர்

அம்மனின் பெயர் :  அமிர்தாம்பிகை

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோவில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம்.Ph:  0413 2680870 , 94435 36652

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 263 வது தேவாரத்தலம் ஆகும்.

* மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.

* இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். சுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான் அம்பாளின் பிறபெயர்கள்: அமிர்தாம்பிகை,வடிவாம்பிகை

* இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: