ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,கொடுமுடி


கோவில் பெயர்   : அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  மகுடேஸ்வரர்

அம்மனின் பெயர் :  திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.

தல விருட்சம்     : வன்னி

கோவில் திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
மாலை மணி 4 முதல் இரவு 8 மணி 

முகவரி : அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி - 638 151  ஈரோடு மாவட்டம். Ph:0 4204-222 375


கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

* ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள். ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும். நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: