செவ்வாய், 26 ஜூலை, 2016

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  ஓணகாந்தேஸ்வரர்

அம்மனின் பெயர் :  காமாட்சி

தல விருட்சம்     :   வன்னியும், புளியமரமும்

கோவில் திறக்கும் : காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக 
திறந்திருக்கும்.            

முகவரி : அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், ஓணகாந்தன்தளி, 
பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்- 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். 
Ph:98944 43108

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 235 வது தேவாரத்தலம் ஆகும்.

* தமிழகத்தின் ஆன்மிகநகரான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற 

ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். 

“இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


* காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே 

சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் 

சன்னதி கிடையாது. ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும், இக்கோயிலை 

ஒட்டி அமைந்துள்ள ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.


* பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை 

பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
                
முந்தைய கோவில்
அடுத்த கோவில்