செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு வாமனபுரீஸ்வரர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்

அம்மனின் பெயர் :  அம்புஜாட்சி, மாணிக்கவல்லி

தல விருட்சம்     :   கொன்றை

கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி      

முகவரி : அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில், திருமாணிக்குழி - 607 401. கடலூர் மாவட்டம்.Ph:04142-224 328

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 228 வது தேவாரத்தலம் ஆகும்.

* மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. வழிபடுகிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

* மூன்று பிரகாரங்களுடன் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. உள்பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், பஞ்சமூர்த்திகள், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரிய, சந்திரன் சன்னதிகள் உள்ளது. திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.

* குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: