வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பதஞ்சலி மனோகரர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   : பதஞ்சலி மனோகரர் (விளமர், விமலன்)

அம்மனின் பெயர் :  மதுரபாஷிணி, 

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, 
                                             மாலை  4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. 

முகவரி :  விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்
(திருவாரூர் நகருக்கு அண்மையில் ஓடம்போக்கி என்னும் ஆற்றங்கரையில்) 


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 153 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இத்தலத்தில் பதஞ்சலி முனிவர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

* புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் சிறக்கவும், இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: