வெள்ளி, 8 ஜூலை, 2016

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு வாய்மூர்நாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : வாய்மூர்நாதர்

அம்மனின் பெயர் : க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்

தல விருட்சம்     : பலா

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  4 மணி முதல் இரவு 8.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்,திருவாய்மூர் அஞ்சல், வழி திருக்குவளை - 610 204 . திருவாரூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.Ph: 097862 44876


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 188 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்தில் இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* சூரியன் வழிபட்ட தலம். பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம். 

* விடங்கலிங்கம் என்பது கடைகளில் விற்கப்படும் லிங்கம் போல மிகச்சிறிதாக இருக்கும். இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப் பார்கள். அர்ச்சகரிடம் சொன் னால் அதை எடுத்துக் காட்டுவார். இதை தரிசித்தால், சொர்க் கம் உறுதி. அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

* நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன.அஷ்ட பைரவர்: காசியில் எட்டு பைரவர்கள் உள்ளனர். அதுபோல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. நான்கு பைரவர் சிலைகளுடன், நான்கு தண்டங்கள் பைரவ அம்சமாக உள்ளன.

* திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: