சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு நீள்நெறிநாதர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   : நீள்நெறிநாதர் ( ஸ்திரபுத்தீஸ்வரர்)

அம்மனின் பெயர் :  ஞானாம்பிகை

தல விருட்சம்     :   குருந்தமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, 
                              மாலை  4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு நீள்நெறிநாத சுவாமி திருக்கோவில், தண்டலைச்சேரி, வேளூர் - 614 715,  திருவாரூர் மாவட்டம்.Ph: 98658 44677

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 174 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* அரிவாள்தாய நாயனார் பிறந்த தலம்.

*முகப்புவாயில் உள் நுழையும் போது இடப்பால் அதிகார நந்தி சன்னதி உள்ளது. கொடி மரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரத்து விநாயகர் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், 

* வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சன்னதிகளும் உள்ளன. 

* விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: