வெள்ளி, 29 ஜூலை, 2016

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  அஷ்டலட்சுமி  திருக்கோவில்

அம்மனின் பெயர் :  அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,

கோவில் திறக்கும் :அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்,
 பெசன்ட் நகர்-600 090, சென்னை.Ph:044-2446 6777, 2491 7777, 2491 1763

முகவரி : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

* ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.

* இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது. உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சவுபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்.

வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்

அம்மனின் பெயர் :  தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்     :  வெள்வேலம்

கோவில் திறக்கும் : காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

முகவரி :  Arulmigu Devi Karumari Amman Temple
   Sannathi Street,Thiruverkadu,
Thiruperumputhur.Pincode - 600 077.
   Phone :     044 - 2680 0430, 2680 0487
   E-Mail ID :karumariamman@tnhrce.org

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விசேசம்

* மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.

* தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்

* மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.

* குறி சொல்லும் இடமாக இருந்து பின்பு படிப்படியாக 50 வருடத்திற்குள் மிகவும் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் கோயில்.

* சுவாமி இராமதாசர் என்னும் மகான் தான் இத்தலத்தில் ஆரம்பத்தில் குறிசொல்லிக்கொண்டிருந்தார்.அவரால்தான் இக்கோயில் பிரபலடைந்தது என்கிறார்கள்.

* அன்னையின் அருள் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமணம் வரம், குழந்தை வரம் வியாபார விருத்தி சுபிட்சம் ஆகியவற்றைத் தருகிறது.

* தீராத நோய்களைத் தீர்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்று செல்கின்றனர்.வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி சூன்யம் மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர்.ராகு கேது கிரகங்களால் தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.

அருள்மிகு காமாட்சி திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு காமாட்சி திருக்கோவில்

அம்மனின் பெயர் :  காமாட்சி அம்மன்

தல விருட்சம்     :  செண்பகம்

கோவில் திறக்கும் : காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன்  திருக்கோவில், காஞ்சிபுரம் -631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.Ph: 0 44-2722 2609

கோவில் சிறப்பு : 

* 1000 To 3000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

* காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது. அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.

* இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள். அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை. எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்

அம்மனின் பெயர் :  அங்காளம்மன்

தல விருட்சம்     :  வேம்பு

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்முத்தனம் பாளையம்
திருப்பூர் மாவட்டம் - 641 606, .Ph:0421-220 3926, 224 0412.

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இத்தலத்தில் அம்மன் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்பு புற்று விடிவில் அருள்பாலிக்கிறார்.

* சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் அங்காளம்மனை மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும். பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால் துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது ஐதீகம். குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள் வாக்காகும்.

வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்.

அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன்

தல விருட்சம்   : ஊஞ்சல்மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை   மணி முதல் 10 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : கோவில் நிர்வாகக்குழு, அருங்கரையம்மன் கலைக்கல்லூரி, அம்மன் நகர், பெரியதிருமங்கலம், சின்னதாராபுரம் - 639 202. 
கரூர் மாவட்டம். P h:4320 - 233 344, 233 334, 94432 - 37320.

கோவில் சிறப்பு : 

* 500 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழர்களால் கட்டப்பட்டது

* இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

* அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை

*  நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள். கோவில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இவ்விடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் "நல்லதாய்' என அழைக்கப்பட்டாள்.

* ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை "அருங்கரை அம்மன்' என்றும் அழைத்தனர். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.ருக்கிறார். 

* பெண்கள் இந்த ஆலயத்திற்குள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வெளியில் நின்றுதான் வணங்க வேண்டும். ஆண்கள் மட்டுமே உள்ளே சென்று வணங்குகின்றனர். 

* குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க அம்பாளிடம் வேண்டிக் கொள்கின்றனர். காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றன

திங்கள், 27 ஜூன், 2016

அருள்மிகு தில்லை காளி திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு தில்லை காளி திருக்கோவில்


அம்மனின் பெயர் : தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி



கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.30.மணி முதல் 12 மணி வரை,
                               மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு தில்லை காளி திருக்கோவில் சிதம்பரம் - 608 001, கடலூர் மாவட்டம். Ph: 04144 - 230 251

கோவில் சிறப்பு :


* பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்' என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும். தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இவளுக்கு சிறப்பு பூஜை நடக்கும்.

* மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

* அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.