கோவில் பெயர் : அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
அம்மனின் பெயர் : ஞானாம்பிகை, பெரிய நாயகி
தல விருட்சம் : பலாசு, வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகுஞானபரமேஸ்வரர் திருக்கோவில்
நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் - 612 605 .
Ph: 94439 59839
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 159 வது தேவாரத்தலம் ஆகும்.
* ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.
* இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும்.
* திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
0 Comments: