வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  சாரபரமேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்

அம்மனின் பெயர் :  ஞானாம்பிகை, ஞானவல்லி

தல விருட்சம்     :   மாவிலங்கை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7.30 மணி முதல் 1 மணி வரை, 
                                                    மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை - Po கும்பகோணம் வட்டம், Ph: 0435-246 8001

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி

* கடன், பிணி தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். 

* ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: