வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு கோணேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : கோணேஸ்வரர்

அம்மனின் பெயர் :  பெரியநாயகி

தல விருட்சம்     :   வாழை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                                                      மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில், 
குடவாசல் - 612 601. Ph: 94439 59839

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 157 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* தை மாதத்தில் 3 நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது.

*  மாசி மகத்தன்று சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் அமுத தீர்த்தத்திற்கு எழுந்தருளி, தீர்த்தநீராடுகின்றனர். பிரகாரத்தில் "குடவாயிற்குமரன்' சன்னதி இருக்கிறது.
* இந்த முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். இடும்பனுக்கும் சன்னதி உள்ளது. அருகருகே இரண்டு பைரவர் (ஒருவருடன் நாய் வாகனம் இல்லை), சூரியன், சந்திரன் ஆகியோரும் உள்ளனர்.

*  இதில் சூரியன் அமர்ந்தும், சந்திரன் நின்ற கோலத்திலும் இருக்கிறார். பெற்றோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் சூரிய, சந்திரனை வழிபட்டு மன அமைதி பெறுகின்றனர். அருகில் சூத முனிவர், சிவனை வணங்கி தியானம் செய்தபடி இருக்கிறார். நால்வர், பரவை நாச்சியாருடன் சுந்தரர், வீணை இல்லாத சரஸ்வதி, கஜலட்சுமி, சப்தமாதர் ஆகியோரும் உள்ளனர்.

* தாயின் ஆசைகளை நிறைவேற்றி வைக்காமல் வருந்துபவர்கள் இங்கு சிவனை வேண்டி, மன அமைதி பெறுகிறார்கள். புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். திருமணதோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சையில் நெய் தீபமேற்றி வழிபடுகிறார்கள்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: