வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : நர்த்தனபுரீஸ்வரர் ( ஆடவல்லார்)

அம்மனின் பெயர் :  பாலாம்பிகை

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 12 மணி வரை, 
                                                  மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோவில், 
தலையாலங்காடு-612 603 , திருவாரூர் மாவட்டம். 
Ph:04366 - 269 235, +91- 94435 00235

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 156 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சன்னதியில் விநாயகர், விசுவநாதர், தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. 

* மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் "எண்கண்' கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.

* வெண்குஷ்டம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும், என்பதும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தித்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: