வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  பள்ளி கொண்ட பெருமாள்

அம்மனின் பெயர் :  ரங்கநாயகி

கோவில் திறக்கும் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில், பள்ளிகொண்டான் - 635 809. வேலூர் மாவட்டம்.
Ph: 94439 89668, 94436 86869.

கோவில் சிறப்பு :

*  1000 To 5000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் "பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

* தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  பாண்டுரங்கன்   திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  பாண்டுரங்கன்

அம்மனின் பெயர் :  ரகுமாயீ

தல விருட்சம்     :   தமால மரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னாங்கூர் - 604 408. திருவண்ணாமலை மாவட்டம் Ph: 04183-225 808

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். யந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு "மகா மேரு' அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது. இந்த மகா மேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது. ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

* குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்  திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  ஆதிகேசவப்பெருமாள்

அம்மனின் பெயர் :  சவுந்திரவல்லி

தல விருட்சம்     :   இலந்தை

கோவில் திறக்கும் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் சுவாமி திருக்கோவில், பவானி - 638 301, ஈரோடு மாவட்டம்.Ph:04256 - 230 192.

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள்

* திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, திருமஞ்சனங்கள் செய்து வழிபடுகின்றனர். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் பெருமாளுக்கு பாசிப்பருப்பு நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  ரங்கநாத பெருமாள்

அம்மனின் பெயர் :  ரங்கநாயகித்தாயார்

தல விருட்சம்     :   புன்னாக மரம்.

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி 
வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள்  திருக்கோவில், 
ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம். Ph:  04153- 293 677

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

* கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள்.

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  லட்சுமி நாராயணர்

அம்மனின் பெயர் :  லட்சுமி

கோவில் திறக்கும் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். 
சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோவில், 
காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம். Ph:  98423 64059.

கோவில் சிறப்பு : 

* 500 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.

* பொதுவாக விரதம் இருப்பவர்கள் ஒரு வாரம், ஒரு மண்டலம் என குறிப்பிட்ட நாட்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவார்கள். ஆனால், இங்கு மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். இதனால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதுநம்பிக்கை. பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்

கோவில் பெயர்   : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்

அம்மனின் பெயர் : பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி)

தல விருட்சம்   : வேம்பத்தூர்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை.

முகவரி : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - 630 565. சிவகங்கை மாவட்டம்.Ph:04575- 236 284, 236 337 97903 25083



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.

* மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.